தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

மியான்மர் நாட்டில் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மரின் முஸ்லிம் விரோதப்போக்கை கண்டித்தும், முஸ்லிம்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலை உலக நாடுகள் மற்றும் ஐநா சபை தடுத்து

மியான்மர் நாட்டில் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மரின் முஸ்லிம் விரோதப்போக்கை கண்டித்தும், முஸ்லிம்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலை உலக நாடுகள் மற்றும் ஐநா சபை தடுத்து நிறுத்தக்கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ. மதார்ஷாபாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இர்ஷாத், பொருளாளர் ஷாநவாஸ், துணைத் தலைவர் ரமலான், துணைச் செயலர் காதர்பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஹாஜாநூஹ் பேசுகையில், மியான்மரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற கொடுமை எந்த நாட்டிலும் நடந்ததில்லை. இந்த பிரச்னையில் அந்நாட்டின் ஆங்சான் சூயி மௌனம் காத்து வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அவர் அந்த பரிசைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஈவு இரக்கமின்றி அந்நாட்டில் நடைபெறும் இனவெறித் தாக்குதலை ஐ.நா. சபை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என தவ்ஹீத் அமாத் அமைப்பினர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com