எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு மருத்துவ முகாம்களை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு மருத்துவ முகாம்களை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவித்தொகை பெறும் 50 முதியோருக்கு கண்ணொளி வழங்கும் திட்டத்தின் கீழ், சிறப்பு அறுவை சிகிச்சை முகாமை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தலைமையில் தொடக்கிவைத்து அமைச்சர் கூறியது: கரூர் மாவட்டத்தில் வரும் அக். 4-ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 முதியோருக்கு கண்ணொளி சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், புலியூர் பேரூராட்சியில் காளிபாளையத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, கால்நடைகளுக்கு தாது உப்புக்கள் வழங்கப்பட்டன.மேலும், அதே பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் மருந்து, மாத்திரைகள், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு, இதே பகுதியில் சிறப்பு மரம் நடும் திட்டமும் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ராயனூர் பகுதியில் 39, 40-வது வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது என்றார் அமைச்சர். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ம. கீதா மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் நளினி, கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ். திருவிகா, கூட்டுறவு சங்க நிர்வாகி விசிகே. ஜெயராஜ், கரூர் ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com