ரூ. 10 லட்சத்தில் புகழூர், பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆய்வு

புகழூர் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்காலில் ரூ. 10 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புகழூர் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்காலில் ரூ. 10 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் மற்றும் முதலியார் வாய்க்கால்கள் மூலம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, என்.புதூர், வாங்கல் பகுதியில் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் கரும்பு, வெற்றிலை, கோரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியால் இப்பகுதியில் வெற்றிலை, கரும்பு, வாழை சாகுபடி பெருமளவில் குறைந்தன.
தற்போது காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், புகழூர் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, தற்போது 2 வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த 2 ஆண்டுகளாக வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாததால் தண்ணீர் கடைமடைப் பகுதி வரை செல்ல வாய்க்கால்களில் முளைத்துள்ள செடிகொடிகள் தடையாக உள்ளன. அவற்றை தூர்வாரும் பணிகள் ரூ. 10 லட்சத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அப்போது, கரூர் முன்னாள் தொகுதிச் செயலாளர் எஸ். திருவிகா, பாப்புலர் முதலியார் வாய்க்கால் சங்கத் தலைவர் கந்தசாமி, புகழூர் வாய்க்கால் சங்க செயல் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com