ஏரி, குளங்களில் பனை விதைகளை நடும் பணி

கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் குளம், ஏரிகளில் 1,156 பனை மர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊன்றினர்.

கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் குளம், ஏரிகளில் 1,156 பனை மர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊன்றினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 10,000 பனை மர விதைகள் நடப்பட உள்ளன. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ. ஜெயராமன் தலைமையிலும், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் இளங்கோ முன்னிலையிலும் அக்கட்சியினர் கரூர் தாந்தோணிமலை குளக்கரை, வெங்கக்கல்பட்டி தேசிய நெடுஞ்சாலை, கரூர் அரசு கலைக்கல்லூரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,156 பனை மர விதைகளை ஊன்றினர். தொடர்ந்து அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட அனைத்து ஒன்றியப் பகுதிகளிலும் 10,000 பனை மர விதைகளை ஊன்றப்போவதாகத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலர் வழக்குரைஞர் பாஸ்கரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, நகரச் செயலர் முரளி, மாவட்ட அமைப்பாளர்கள் கண்மணி ராமச்சந்திரன், தீபக்குமார் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com