முன்னுரிமைக்கடனாக ரூ. 4,231 கோடி வழங்க இலக்கு

நிகழாண்டில் கரூர் மாவட்டத்துக்கு முன்னுரிமைக் கடனாக ரூ. 4,231 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்தார்.

நிகழாண்டில் கரூர் மாவட்டத்துக்கு முன்னுரிமைக் கடனாக ரூ. 4,231 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நபார்டு வங்கி சார்பில் நடைபெற்ற வங்கியாளர்களின் மாதாந்திரக் கூட்டத்தில் கரூர்  மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் 2018-19 புத்தகத்தை வெளியிட்டு மேலும் அவர் கூறியது:
வங்கிகளின் வருடாந்திரக் கடன் திட்டஅறிக்கை தயாரிப்பதில் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.  நிகழாண்டிற்கான (2018-19) நபார்டு வங்கியின் கரூர் மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தில் முன்னுரிமைக் கடனாக ரூ. 4,231கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதில் குறுகிய காலப் பயிர்க் கடனாக ரூ. 1,438 கோடியும், நீண்டகாலக் கடன்களில்  நீர் வளம்,  விவசாயக் கருவிகள், தோட்டக் கலை பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, விவசாயக் கிடங்குகள், உணவு பதப்படுத்துதல் போன்றவற்றிற்காக ரூ. 593கோடியும்,  சிறு, குறு, மத்திய தொழில் வளர்ச்சிக்கு ரூ. 1,022 கோடியும், வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகங்களுக்கு ரூ. 484கோடியும், கல்விக் கடன்களுக்கு ரூ. 89கோடியும்,  வீட்டுவசதிக் கடன் திட்டங்களுக்கு ரூ. 339 கோடியும், மரபு சாரா எரிசக்தி கடன்களுக்கு ரூ.9 கோடியும்,  இன்னும் பிற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ. 205 கோடியும், நபார்டு வங்கியின் 2018-19ம் ஆண்டுக்கான கரூர் மாவட்ட வளம் சார்ந்த கடன் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள 18 சதவீத மொத்த விவசாயக் கடன்களில் நடப்பு ஆண்டில் 8 சதவீதம் சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.  மாவட்டத்தின் விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நபார்டு வங்கித் தேவையானகருத்துக்களையும்,  உள்கட்டமைப்பு வளச்ச்சித் திட்டங்களையும் திட்டமிட்டுள்ளது.
மேலும் காவிரி டெல்டா படுகையின் கரைகளைப் பலப்படுத்துதல்,  முக்கியமாக மாயனூர் கட்டளைக் கால்வாயின் முன்புறமும், பின்புறமும் கரை பலப்படுத்தப்பட்டு மழை, வெள்ளக்காலச் சேதங்களைக் குறைத்தல்,  தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர் வட்டங்களில் உள்ள கசிவு நீர் குட்டைகளையும், குளங்களையும் மேம்படுத்துதல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார். முன்னதாக புத்தகத்தின் முதல் பிரதியை  ஐஓபி வங்கியின் ஈரோடு மண்டல உதவி பொதுமேலாளர் பி. மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்டமுன்னோடி வங்கி மேலாளர்,  உதவிப் பொதுமேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com