மூன்றாம் நாளாக ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மூன்றாவது நாளாக புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மூன்றாவது நாளாக புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஜூன் 11ஆம் தேதி தொடங்கினர். இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், கைது நடவடிக்கைகையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாவிஷ்ணன், சு.வேலுமணி, வ.குமரவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com