நரிக்கட்டியூரில் கட்டுமானப் பணி தொடங்க தொடரும் எதிர்ப்பு: 2 ஆவது முறையாக பூமிபூஜை நிறுத்தம்

கரூரை அடுத்த நரிக்கட்டியூர் எஸ்.வெள்ளாளப்பட்டியில்  செவ்வாய்க்கிழமை அடுக்குமாடி வீடு கட்டுவதற்கான பூமிபூஜை 2 ஆவது முறையாக அப்பகுதி யினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

கரூரை அடுத்த நரிக்கட்டியூர் எஸ்.வெள்ளாளப்பட்டியில்  செவ்வாய்க்கிழமை அடுக்குமாடி வீடு கட்டுவதற்கான பூமிபூஜை 2 ஆவது முறையாக அப்பகுதி யினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 
கரூரை அடுத்த நரிக்கட்டியூர் எஸ். வெள்ளாளப்பட்டியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகே விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா அமைக்க 2 ஏக்கர் 75 சென்ட் நிலம் வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.  
நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கான ஆணை மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அண்மையில் வழங்கினர். 
இதையடுத்து நரிக்கட்டியூர் எஸ்.வெள்ளாளப்பட்டியில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடந்த 5 ஆம் தேதி குடிசை மாற்றுவாரியத் துறையினர் சுத்தப்படுத்தும் பணி மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர்.  மறுநாள் 6 ஆம் தேதி குடிசைமாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பூமிபூஜை நடத்த முயன்றனர். 
எதிர்ப்பு காரணமாக பூமிபூஜை செய்யாமல் திரும்பினர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் குடிசை மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் வெங்கடேசன், அதிகாரிகள் பூமிபூஜை நடத்த முயன்றதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். 
தகவலறிந்த பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், கரூர் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் 2 ஆவது முறையாக பூமிபூஜை செய்யாமல் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com