கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் ஆர்.தேவராஜன் தலைமை வகித்தார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொருளாளர் கே. அம்மையப்பன், மாநில துணை பொதுச் செயலாளர் சக்தி.நடராஜன், மாநில வர்த்தக அணிச் செயலாளர் விசா ம.சண்முகம், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.மூர்த்தி, மேற்கு மாவட்டச் செயலாளர் மீனாட்சிகே.ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பி.அருள், திருச்சி மாவட்டச் செயலாளர் எம்.சேகர் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாய்க்கால்கள், ஏரி, குளங்களை உடனடியாக தூர்வார வேண்டும், காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் குறுக்கே 5 கி.மீ. தூரத்திற்கு தடுப்பணை கட்ட வேண்டும்,  கரூர் மாவட்டம் பெரியதாதம்பாளையம் ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி உடனடியாக ஏரியை தூர்வாரி விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். வெள்ளியணை, வீரராக்கியம், உப்பிடமங்கலம் குளங்கள் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கொத்தயம்-நல்லதங்காள் அணைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கரூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய நீர்நிலைகளை உருவாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com