கரூரில் அமைச்சர் இல்ல விழா: முதல்வர் பங்கேற்றார்

கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இல்ல பூப்புனித நீராட்டு விழா,

கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இல்ல பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 
விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார்.
போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்-விஜயலட்சுமி பாஸ்கர் தம்பதியின் மகள் வி.அக்ஷயநிவேதாவுக்கு பூப்பு நன்னீராட்டு விழா,  அமைச்சரின் தம்பியும், ஆண்டாங்கோவில் கிழக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஆர்.சேகர் - சாந்தி சேகர் தம்பதியின் மகள் ஆர்.எஸ். தாரணி - எஸ். சிவா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கரூர் அட்லஸ் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 
விழாவிற்கு, வருகை தந்தவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரவேற்றார். 
விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று செல்வி வி. அக்ஷய நிவேதா மற்றும் புதுமணத் தம்பதிகளான ஆர்.எஸ். தாரணி - எஸ். சிவா ஆகியோரை வாழ்த்தினர். 
விழாவில் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை,  அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், காமராஜ், வளர்மதி, முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி, கோகுலஇந்திரா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். கீதா மணிவண்ணன், உ. தனியரசு, மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். திருவிகா, மாவட்ட துணைச் செயலாளர் பசுவை பி. சிவசாமி, நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலாளர்கள் பி.மார்கண்டேயன், இன்ஜினியர் கமலக்கண்ணன், பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பொரணி கே.கணேசன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் என்.செல்வராஜ், திருக்காம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.செல்வமணி, நகர இளைஞரணி செயலாளர் சேரன் எம்.பழனிசாமி, துணைச் செயலாளர் என்.பழனிராஜ், முன்னாள் மாணவரணிச் செயலாளர் தானேஷ், நகர பேரவை துணைத்தலைவர் செல்மணி, நகர மாணவரணி பொருளாளர் எம்டிஎன்.மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
முதல்வரின் வருகையையொட்டி திருச்சி மண்டல காவல் துறை தலைவர் வி. வரதராஜ் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com