'தேசிய தரவரிசைப் பட்டியலில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி'

தேசிய தரவரிசைப் பட்டியலில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 100-வது இடத்தைப் பெற்றுள்ளது என்றார் அக் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் வி. ஜான் அசோக்.

தேசிய தரவரிசைப் பட்டியலில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 100-வது இடத்தைப் பெற்றுள்ளது என்றார் அக் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் வி. ஜான் அசோக்.
இதுகுறித்து அவர் ரோவர் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் விரிவான, தெளிவான, நியாயமான ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகு வெளியிடும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், தேசியளவிலான கல்லூரிகளில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி 100-வது இடத்தையும், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 37-வது இடத்தையும், பாரதிதாசன் பலக்லைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
பொருளாதார மற்றும் சமுதாய ரீதியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய, விவசாயக் குடும்பத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கல்லூரியான தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி தேசிய தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் என்.ஐ.ஆர்.எப். சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது. இந்த அமைப்பு, கற்றல், கற்பித்தல் மேம்பாடு, பட்ட மேற்படிப்பின் சிறப்பும் - பயனும், ஆய்வு, வேலைவாய்ப்பு, மாணவர்கள் சேர்க்கை மற்றும் வெளிப்படைத் தன்மை, மாற்றுத் திறனாளிகளுக்கான சேர்க்கை,
சமூகசேவை சார்ந்த பிற செயல்திட்டங்கள் உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
ஏற்கெனவே தேசிய நிதி நல்கைக் குழுவின் 35-க்கும் மேற்பட்ட ஆய்வுத் திட்டங்களுக்கான நிதியைப் பெற்ற ஒரே கல்லூரி என்ற சிறப்பையும், பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் சிறந்த சுயநிதிக் கல்லூரிக்கான விருதையும் பெற்றுள்ளது.
2016 ஆம் கல்வியாண்டில்,
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற இக் கல்லூரி 2017-ல் இந்திய தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளது என்றார் அவர். ரோவர் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பாலமுருகன், நிர்வாக அலுவலர் ஆர். ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com