"கிணற்றில் வெட்டி எடுத்த கற்களை அப்புறப்படுத்த அனுமதி பெறவேண்டும்'

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறுகளை ஆழப்படுத்தும் போது வெட்டி எடுக்கப்பட்ட கற்களை அப்புறப்படுத்துவதற்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறுகளை ஆழப்படுத்தும் போது வெட்டி எடுக்கப்பட்ட கற்களை அப்புறப்படுத்துவதற்கு கோட்டாட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறுகளை ஆழப்படுத்தும் போது, அந்த கிணறுகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை அப்புறப்படுத்தி எடுத்துச்செல்ல அனுமதி பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த வட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களது வயலில் உள்ள கிணறுகளை ஆழப்படுத்தும் போது, அந்தந்த வட்டாட்சியர்கள் அல்லது கோட்டாட்சியர் ஆகியோரிடமிருந்து அனுமதி பெற்று வெட்டப்பட்ட கற்களை எடுத்துச்செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com