நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரி சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலர் தா. பர்வேஜ் பாஷா தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மத்திய மண்டல தேர்தல் அதிகாரி கே.ஏ. மீரான் மொய்தீன், மாவட்டச் செயலர் ஏ. குதரத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலர் வழக்குரைஞர் முஹம்மது பிரோஸ், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலர் வழக்குரைஞர் ப. காமராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலர் வழக்குரைஞர் பேரா. முருகையன், திராவிடர் விடுதலை கழக மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை வரைமுறை செய்து, அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் ஜமீர்பாட்ஷா, ரஷீத் அஹமது, முஹமது இலியாஸ், முஹம்மது ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மருத்துவ சேவை அணிச்செயலர் ஏ. குலாம்காதர் வரவேற்றார். மாவட்டச் செயலர் ச. முஹம்மதுயாசீன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com