மே.19 -ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்: கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மே 19 ஆம் தேதி சென்னையில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த, கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மே 19 ஆம் தேதி சென்னையில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த, கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து மாநில தலைவர் எஸ். பத்மராஜ் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில், 2-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட ஊதியம், படிகள் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். 2-வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க, பரிசீலனைக் குழு அமைத்து ஓராண்டு ஆகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் 3 கட்டங்களாக போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கோரிக்கைகள் சம்பந்தமாக அமைக்கப்பட்ட பரிசீலனைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி 3.5.2017 முதல் 5.5.2017 வரை கோரிக்கை அடையாள அட்டை அணிந்து பணிபுரிதல், 2ஆம் கட்டமாக 17.5.2017 முதல் 19.5.2017 வரை மண்டல அளவில், இணைப்பதிவாளர் அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டமும், 19.6.2017 ஆம் தேதி சென்னை பதிவாளர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு, நிறுவனர் அந்தோனி முத்துசேவியர், பொதுச் செயலர் பா. சம்பத், துணை பொதுச் செயலர் என். சந்தனராஜ், பொருளாளர் வி.ஆர். பட்டாபிராமன், அமைப்புச் செயலர் கே.வி. மகாலிங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பிரசார செயலர் எஸ். பரமாத்மா, தலைமை நிலைய செயலர் ஆர். பத்மநாதன், தணிக்கையாளர் ராஜகோபால் பெரம்பலூர் மண்டல செயலர் ரா. பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ரா. மணிவண்ணன், பொருளாளர் து. மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட செயலர் ஜெ. பழனியான்டி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com