பாரதிதாசன் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரம்பலூரில், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 127-வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூரில், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 127-வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு,
இலக்கியப் பேரவைத் தலைவர் வேல். இளங்கோ, செயலர் கி. முகுந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, கவிஞர்கள் முத்தரசன், அகவி, பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் பாவேந்தரின் சிறப்பையும், அவரது பாடல்களின் மாண்பையும் விளக்கி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில், கவிஞர்கள் தேவன்பு, தேனரசன், ஆசிரியர் சிவானந்தம், நிர்வாகிகள் தங்கராசு, அண்ணாதுரை, பெரியசாமி,
துரை. மகேந்திரன், யுவராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் மு. பிச்சைபிள்ளை வரவேற்றார். இணைச் செயலர் செ. சிங்காரவேலு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com