பெரம்பலூர் மாவட்டத்தில் 41,800 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய இலக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 41,800 ஹேக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் வேளாண் இணை இயக்குநர் சுதர்சன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 41,800 ஹேக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் வேளாண் இணை இயக்குநர் சுதர்சன்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பளவை பொறுத்தவரை, நெல் 10,200 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 41,800 ஹெக்டேரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 10 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பயறு வகைகளை பொருத்தவரை 1,300 ஹெக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்களில் 5,200 ஹெக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 15 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பருத்தி 34,400 ஹெக்டேரும், கரும்பு 5,350 ஹெக்டேரும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் விதைகள் 4.220 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 39.860 மெட்ரிக் டன், சிறுதானியங்களில் வரகு கோ-3, 1.550 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 3.943 மெட்ரிக் டன் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
உளுந்து 3.172 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது 4.495 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. துவரை 1.158 மெட்ரிக் டன், நிலக்கடலை விதைகள் 3.371 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது 7.126 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
தானிய உற்பத்தி இலக்கை அடைவதற்கான செயல் விளக்கம், இடுபொருள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய இலக்கீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com