மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

பெரம்பலூர் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன் தொடக்கி வைத்தார். இந்தப் போட்டிகளில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து பிரிவினரும் பங்கேற்றனர்.
தடகளம், குழுப்போட்டிகளான கையுந்துபந்து, இறகுப்பந்து மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 15 பள்ளிகள், 6 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகளும், 311 ஆண்களும், 225 பெண்களும் ல் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டத்தில் அ. அகமதுகரீம், 600 மீ ஓட்டத்தில் பி. ரமேஷ், 2,000 மீ ஓட்டத்தில் எஸ். பிரேம்நாத், நீளம் தாண்டுதல் போட்டியில் எஸ். ராஜதுரை, ஈட்டி எறிதலில் ஜி. ஐயப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில் எம். சிவநேசன், வட்டு எறிதல் போட்டியில் எஸ். ஆனந்த்ராஜ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பெண்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டததில் ஜே. பீபி பாத்திமா, 600 மீ ஓட்டத்தில் கே. பவானி, 2,000 மீ ஓட்டத்தில் ஆர். கிருத்திகா, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் என். நாகப்பிரியா, வட்டு எறிதல் போட்டியில் எஸ். குழலி, ஈட்டி எறிதல் போட்டியில் வி. பிரியா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா. இந்நிகழ்ச்சியில், தடகளப் பயிற்றுநர் க. கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்...
இதேபோல் அரியலூர் கல்வி மாவட்ட அளவிலான மாந்திர விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளை சாளையக்குறிச்சி பள்ளி தலைமை ஆசிரியை லீலாவதி தொடங்கி வைத்தார்.
இதில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தடகளப் போட்டிகள் மற்றும் கைப்பந்து போட்டிகள் ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களை மாவட்டக் கல்வி அதிகாரி கலைமதி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, பள்ளி கல்வி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com