ஆக. 22-இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜேக்டோ-ஜியோ முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக. 22 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக. 22 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஜேக்டோ, ஜியோ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பெரம்பலூரில்,  மாவட்ட அளவிலான ஜேக்டோ,  ஜியோ கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோ. ராமமூர்த்தி, கி. ஆளவந்தார், ஒய்.ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை 1.4.2033 முதல் தொடரஅரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக, ஓய்வூதிய மாற்றத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து சீரமைக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 8-வது ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மேலும், தொகுப்பூதியம், மதிப்பீதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியங்களை ரத்துசெய்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8-வது ஊதியக்குழு மாற்றம் ஏற்படுத்தும் வரை 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக. 22 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட நாளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், அனைத்து சங்கங்களின் மாவட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com