விநாயகர் சிலைகளை காவிரியில் மட்டுமே கரைக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

விநாயகர் சிலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளார்.

விநாயகர் சிலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பதால், அவற்றைப் பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். விநாயகர் சதூர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீரில் கரைக்கப்படும் வழக்கம் நம்மிடையே உள்ளது.
ஆனால், அண்மைக்காலமாக ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பிறகு, அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. இதை தவிர்க்கும் வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்தி, அவற்றை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பூஜித்த விநாயகர் சிலைகளை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட திருச்சி காவிரி ஆற்றில் மட்டுமே கரைத்து, விநாயர் சதூர்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com