இளையோர் சங்க தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான இளையோர் செஞ்சிலுவை சங்க தலைவர்களுக்கான பயிற்சி முகாம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்ட அளவிலான இளையோர் செஞ்சிலுவை சங்க தலைவர்களுக்கான பயிற்சி முகாம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இப்பயிற்சி முகாமை தொடக்கி வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி பேசியது:
மாணவர்கள் ஆளுமை பண்பு, ஒழுக்கம், சுயக்கட்டுபாடு, மனிதநேயம், தலைமைப் பண்பு, தொண்டு மனப்பான்மை, நற்பண்புகளை வளர்த்து சமுதாயத்தில் சிறந்து விளங்க இப்பயிற்சி முகாமை பயன்படுத்திகொள்ள வேண்டும். மேலும், கண்ணியமிக்கவர்களாகவும், கடமை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மாவட்ட கன்வீனர் வெ. ராதாகிருஷ்ணன் பயிற்சி முகாமின் நோக்கங்கள், முக்கிய செயல்பாடுகள், புதிய சூழலில் மாணவர்கள் எவ்வாறு ஆயத்திப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மண்டல அலுவலர் ராஜா, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் வரலாறு, 7 அடிப்படை கொள்கைகள் குறித்தும், மாவட்ட பொருளாளர் எம். கருணாகரன் அமைப்பின் நட்புறவு என்ற தலைப்பிலும் பேசினர்.
தொடக்க விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் வி. பிருதிவிராசன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கே. முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் பெ. நாகமணி, உதவி
மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் சி. ராமதாஸ், பி. செந்தாமரைச்செல்வி, எஸ். லதா, பி. ஜோதிலட்சுமி, பி. இளங்கோவன், கே. தேத்தரவு ஸ்டெல்லா, தி. ரெஜினாமேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை, மாவட்ட இணை கன்வீனர் த. மாயகிருஷ்ணன், ஆர். ராசமாணிக்கம், மண்டல அலுவலர்கள் எம். நவிராஜ், எம். ஜோதிவேல், எம். செல்வராஜ், எ.எஸ். ராஜேந்திரன், ஆர். துரை, ஆர். செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மண்டல அலுவலர் கே. கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) வரை நடைபெறும் இப் பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 350 மாணவர்களும், 330 மாணவிகளும் என மொத்தம் 680 மாணவர்களும், 80 உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com