கட்டுமானத் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் கல்வி: விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளை நல வாரிய நிதியின் மூலம் அடுத்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளை நல வாரிய நிதியின் மூலம் அடுத்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 தமிழக அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும், பதிவு பெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளை முறையே 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் அப்பகுதியில் உள்ள நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகளில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியின் மூலம் கல்வி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் தகுதி மற்றும் விருப்பம் உள்ள தொழிலாளர்கள், தங்களது குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் அடுத்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளியில் சேர்த்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), 434-எ, மேட்டுத்தெரு, எளம்பலூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரில் அல்லது 04328-277822 என்னும் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com