நலிவடைந்த விளையாட்டு வீரர்கள்  ஓய்வூதியத் திட்டத்தில் பயன் பெறலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் 2017 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் 2017 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா தெரிவித்தது:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 2017 ஏப். 1-ல் 58 வயது பூர்த்தியடைந்தவராகவும், தேசியளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருக்கவும் வேண்டும். தேசியளவிலான போட்டிகளில் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை. பள்ளி, கல்லூரிகளில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களினால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வென்றோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை. விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ. 6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
மேற்கண்ட தகுதியுடையோர் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட, விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச் சான்று நகல், வயது சான்று நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. ஓய்வூதிய விண்ணப்பத்தை நிராகரிக்கவோ, தள்ளுபடி செய்யவோ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உரிமை உண்டு
இதற்கான விண்ணப்பப்த்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ஞ்ர்ஸ்.ண்ய் என்னும் முகவரியில் பதிவிறக்கி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் டிச. 31 -க்கு முன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7407-103516.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com