மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மத்திய அலுவலக நுழைவு வாயில் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மத்திய அலுவலக நுழைவு வாயில் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
திட்டத் தலைவர் பெ. வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சில் தலைவர் சித்திரவேல், கோட்டச் செயலர் பி. திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சில் செயலர் ரெங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தினார்.  மின் வாரியத் தொழிலாளர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய உயர்வை வழங்க வேண்டும். களத் தொழிலாளர்களின் பதவி உயர்வை நீதிமன்ற உத்தரவு பெற்று உடனே வழங்க வேண்டும். 
களப் பிரிவில் காலிடங்களை நிரப்ப வேண்டும். ஏற்கெனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சி.பி.எஸ். தொகை வழங்க வேண்டும். அலுவலகத்தில் களப்பிரிவுத் தொழிலாளர்களை மாற்றுப் பணியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் வாங்குவோரைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் பூபதி, பன்னீர்செல்வம், ஆர். ராஜ்குமார், மதியழகன், விஜயலட்சுமி, வாசுகி அம்மையார், மணிமாறன், பாபு ராணி, ரவி, சிவனேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
திட்டச் செயலர் ஆர். மாரிமுத்து வரவேற்றார். திட்டப் பொறுப்பாளர் ஏ. சின்னதுரை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com