வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் இருப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் வேளாண்மை இணை இயக்குநர் சுதர்சன்.
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் வரை இயல்பான மழையளவு 157 மி.மீட்டராகும். நிகழாண்டு, இதுவரை 223.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம்.
அதன்படி, விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம் செய்யும் வகையில், 2017- 18 ஆம் ஆண்டு 54.5 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல் விதை, வரகு 2.61 மெட்ரிக் டன், பயறு வகை பயிர்களான உளுந்து 8.5 மெட்ரிக் டன், துவரை 1.02 மெட்ரிக் டன், நிலக்கடலை 9.11 மெட்ரிக் டன் விதைகள் விநியோகம் செய்வதற்காக வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய எண்ணெய்ப் பனை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் இயக்கம் ஆகிய திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளுக்குள்
வெளியிடப்பட்ட நெல் ரக விதைகளுக்கு கிலோவுக்கு ரூ. 10 மானியமாகவும், 15 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட நிலக்கடலை மற்றும் உளுந்து விதைகளுக்கு கிலோவுக்கு ரூ.  25 மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை நேரில் அணுகி பயன்பெறலாம் என இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com