பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில் விதைப்பந்து தயாரிப்பு, செய்முறை பயிற்சி

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை மற்றும் பெரம்பலூர் புதிய பயணம்

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை மற்றும் பெரம்பலூர் புதிய பயணம் சமூக நல அமைப்பு சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்து தயாரிக்கும் செய்முறை விளக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கல்லூரியின் முன்னாள் நுண்ணுயிரியல் துறை மாணவரும், புதிய பயணம் சமூகநல அமைப்பு நிர்வாகியுமான கண்ணன், விதைப்பந்து தயாரிப்பு குறித்த செய்முறை விளக்கம் அளித்தார். தயாரிக்கப்படும் பந்துகளை எவ்வாறு, எப்போது, தரிசு மற்றும் சாலையோரங்களில் வீசுவது என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில் மாணவ, மாணவிகள் பல குழுக்களாக பிரிந்து செம்மண், பசுஞ்சாணம் மற்றும் தண்ணீர் கலந்து, அதன் மையப்பகுதியில் வேம்பு, நாவல், புங்கை, புளி, வாகை, ஈச்ச மர விதைகளை வைத்து, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதை பந்துகள் தயாரித்தனர்.
இதில், கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் பாலகிருஷ்ணன், குமணன், புவனேஸ்வரி, வினோத் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 நுண்ணுயிரியல் துறைத்தலைவர் முனைவர் சுரேஷ்ராஜா வரவேற்றார். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் விஜயக்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com