வேப்பூர் அம்மா பூங்காவை மாற்று இடத்தில் அமைக்க  வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் சந்தை செயல்படும் இடத்தில் அம்மா பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை தவிர்த்து, வேறு இடத்தில்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் சந்தை செயல்படும் இடத்தில் அம்மா பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை தவிர்த்து, வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, வேப்பூர் கிராம பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேப்பூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது.
 அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கோயில் பூஜைகள், பராமரிப்புப் பணிகள் மற்றும் மின் கட்டணம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
இந்நிலையில், அந்த இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட உள்ளதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படும் பூங்காவை, வேறு இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனை வழங்க வலியுறுத்தல்:பெரம்பலூர் 7-வது வார்டுக்குள்பட்ட ரோவர் பள்ளி அருகே, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்தன. இவை அனைத்தும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்ததால், அவற்றை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், கடந்த சில மாதங்களுக்க முன் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன.
இதில், வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு எளம்பலூர் மலையடிவாரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த இடம் வீடு கட்டுவதற்கு தகுதியில்லாததால் மாற்று இடம் வழங்க வேண்டும் என, வீடுகளை இழந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com