இ- சேவை மையங்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மற்றும் இ சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மற்றும் இ சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஜன. 1-இல் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு ஜூன் 1 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினருக்கும் தெரிவிக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:  
 பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க தொடர் நடவடிக்கைகள் நடைபெற உள்ளது. பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் 1,37,297 ஆண் வாக்காளர்களும், 1,43,762 பெண் வாக்காளர்களும், 14 இதர வாக்காளர்களும் உள்ளனர். குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,28,473 ஆண் வாக்காளர்களும், 1,29,958 பெண் வாக்காளர்களும், 11 இதர வாக்காளர்களும் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1.1.2017-ல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு ஜூன் 1 முதல் 31 வரை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 9.7.2017 மற்றும் 23.07.2017 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு படிவம் 6, இறந்தவாக்காளர் அல்லது நிரந்தரமாக வசிக்காத வாக்காளர் உள்ளிட்ட இனங்களில் வாக்காளர் பெயரை நீக்கப் படிவம் 7, வாக்காளர் பட்டியலில் திருத்தம், ஒரே பாகத்திற்குள் பிரிவு மாற்றம் செய்வதற்காக படிவம் 8, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்து சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8 - ஏ ஆகிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் வழங்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களை தவிர w‌w‌w.‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தின் மூலமாகவும், இ-சேவை மையங்களின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் நபர்கள் வருவாய் கோட்டாட்சியர் 9445000458, பெரம்பலூர் வட்டாட்சியர் - 9445000610, குன்னம் வட்டாட்சியர்  9445000612, வேப்பந்தட்டை வட்டாட்சியர் -9445000611, ஆலத்தூர் வட்டாட்சியர் -9842196910, செந்துறை வட்டாட்சியர் - 9445000615 ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆட்சரின் நேர்முக உதவியார் (பொது) மனோகரன், தேர்தல் வட்டாட்சியர் சிவஞானம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com