அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாடாலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா, மருத்துவப் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்குவதில் ஏதேனும் காலதாமதம் ஏ ற்படுகிô என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்களுக்குத் தேவையான மருந்துப்பொருள்கள் கையிருப்பில் உள்ளதா, அடிப்படை பரிசோதனைகள் செய்வதற்குத் தேவையான வசதிகள் உள்ளதா என மருத்துவரிடம் கேட்டறிந்த ஆட்சியர், சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியைப் பார்வையிட்ட ஆட்சியர், அங்கு தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டறிந்து, மாணவிகளுக்கான கழிப்பறைகள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக் கப்படுகிô என ஆய்வு செய்தார்.
பிறகு, மாணவிகளுக்கான சமையல் உணவுக்கூடத்தில் தரமான முறையில் உணவுப் பொருள்கள் சமைக்கப்படுகின்றனவா? அட்டவணைப்படி சமையல் செய்யப்படுகிô எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், விடுதிக்கு ஏதேனும் அடிப்படை வசதிகள் குறைபாடு இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும், சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டுமெனவும் விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநர் சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com