புகார்கள் வரும் இலவச தொலைபேசி செயல்படவில்லை: பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் ஆட்சியகத்தில் அடிப்படை பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க வைக்கப்பட்டுள்ள இலவசத் தொலைபேசி எண் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பெரம்பலூர் ஆட்சியகத்தில் அடிப்படை பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க வைக்கப்பட்டுள்ள இலவசத் தொலைபேசி எண் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் நிலவும் பல்வேறு அடிப்படை வசதி குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க ஆட்சியரகத்தில் 1800 425 4556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த பிப். 11 முதல் பொதுமக்கள் இந்த எண்ணில் தங்களது புகார்களைத் தெரிவித்து வந்தனர். இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தச் செயல்பாடு சமூக ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தெரிவித்த 300-க்கும் மேற்பட்ட புகார்களில், இதுவரை சுமார் 150 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒருசில புகார்களுக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக எண்ணுக்கு எந்த அழைப்பும் வரவில்லையாம். இதுகுறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டதற்கு, ஒருசில எண்களிலிருந்து அழைப்பு வருகிறது. பெரும்பாலான எண்களில் இருந்து அழைப்பு வரவில்லை. இவற்றை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, பிஎஸ்என்எல் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
மாவட்டத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க வசதியாக, இலவச தொலைபேசி எண்ணை விரைவாக சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com