"உணவுப் பொருள்களின் தரம் குறித்த விழிப்புணர்வு அவசியம்'

உணவுப் பொருள்களின் தரம் குறித்த புரிதல் மக்களிடம் இருக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு.

உணவுப் பொருள்களின் தரம் குறித்த புரிதல் மக்களிடம் இருக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நெடுஞ்சாலையோர உணவகங்களில் உணவு தரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேலும் பேசியது:
மக்களிடையே உணவின் ஆரோக்கியம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகள், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக உணவுப் பொருள்களின் தரம், அதன்மூலம் உடல்நலனுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.  

நம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் தரம் குறித்த புரிதல் நம்மிடையே இருக்க வேண்டும். கடைகளில் வாங்கும் உணவுப்பொருள்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் பள்ளிகளில் பயிலும் சக மாணவ மாணவிகளும் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுப்பொருள்களை உண்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றார் அவர்.    

தொடர்ந்து, உணவுப்பொருள்களில் உள்ள கலப்படங்களை அறிந்துகொள்வதற்கான வழிமுறைகள், கலப்படமான உணவுப்பொருள்களை உண்பதால் ஏற்படும் தீங்குகள், கலப்பட உணவுப்பொருள்கள் கடைகளில் விற்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.  

கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) துரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டமைப்பு நிர்வாக செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com