பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் 225 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் 2-வது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 225 சத்துணவு ஊழியர்களை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் 2-வது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 225 சத்துணவு ஊழியர்களை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து, அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும் எனஅபன உள்ளிட்ட 25 அம்ச கோரக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) முதல் வியாழக்கிழமை வரை தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.அதன்படி, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் 2-வது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் சத்துணவு பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 203 பெண்கள் உள்பட 225 பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com