குரும்பலூரில் மே 23 இல் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
குரும்பலூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கடந்த 14 ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து, 15 ஆம் தேதி காப்பு கட்டுதலும், 19 ஆம் தேதி ஆலடியான் முத்துசாமி, ஆப்பூரான் நல்லேந்திரன் சுவாமி கோயிலில் மா விளக்கு மற்றும் பொங்கல் பூஜையும், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றன. சனிக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அக்னி சட்டி, அலகு குத்துதல், ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 22 ஆம் தேதி தீ மிதித்தல், பொங்கல் வைத்து வழிபாடும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி 23 ஆம் தேதி காலை காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்படும் தேர் மாலையில் நிலைக்கு வந்தடையும். 24 ஆம் தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com