ஓடையில் கொட்டப்பட்ட விவசாயிகள் மண்வள கையேடுகள்

பெரம்பலூர் அருகே விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட மண்வளக் கையேடுகள் ஓடையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வேளாண் துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று கையேடுகளை சேகரித்து விசாரித்து

பெரம்பலூர் அருகே விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட மண்வளக் கையேடுகள் ஓடையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வேளாண் துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று கையேடுகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
2011-12 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளைநில மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடித் திட்டத்தை மேற்கொள்ளவும், பயிர் வாரியான இடுபொருள்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை இடவும், திட்டப்பயன்களை அறியவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டது. மேலும், போதிய அளவு உரமிடுதல், பண்ணை மற்றும் பருவ வாரியான உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்த விவரங்களைப் பராமரிக்கவும் இந்த கையேடு விவசாயிகளுக்குப் பெரும் பயன் அளித்து வந்தன.
இறவை பரப்பில் 2.5 ஹெக்டேருக்கு ஒரு மாதிரி, மானாவாரிப் பரப்பில் 10 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப் பரிந்துரையுடன் கூடிய மண்வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கையேடுகள், பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தின் பாலத்தில் கீழ் கொட்டப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இதுதகவலறிந்த வேளாண் துறையினர், அங்குசென்று ஓடையில் கிடந்த மண்வள அட்டைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்வள அட்டைகளைக் கொட்டிச் சென்றது யார் என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com