இன்று முதல் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் புதன்கிழமை (நவம்பர் 15) முதல் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் புதன்கிழமை (நவம்பர் 15) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி.
 ஜனவரி 2018-இல் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுத தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8 ஆம் வகுப்புக்கும் கீழ் படித்து இருக்க வேண்டும். மேலும், இடையில் நின்ற 12 வயது பூர்த்திடைந்தவர்களும் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகலை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.  தோல்வியுற்ற பாடங்களை தற்போது தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தனித்தேர்வர்கள் ரூ. 42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, சுயமுகவரியிட்ட உறை ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக மொத்தம் ரூ. 175 தொகையை புதன்கிழமை முதல் நவம்பர் 25 வரை செலுத்தலாம்.
சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் நவ. 27 முதல் 29 ஆம் தேதி வரை மொத்தம் ரூ. 675 தொகையை, சேவை மையமான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேரில் செலுத்த வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றிய தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சலுகைகள் கோரும் கடிதம், உரிய மருத்துவச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களுடன் இணைத்து சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com