உலக பேரிடர் தின விழிப்புணர்வுப் போட்டிகள்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக பேரிடர் தின விழிப்புணர்வு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக பேரிடர் தின விழிப்புணர்வு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
பேரிடர் குறைப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 137 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.   
 6- 8 ஆம் வகுப்பு வரை பிரிவு பேச்சுப்போட்டியில் ஒகலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பவானி முதலிடம், கட்டுரைப் போட்டியில் அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா 2 ஆம் இடம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா 3 ஆம் இடம், கட்டுரைப் போட்டியில் அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 2 ஆம் இடம், து.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜீவப்பிரியா 3 ஆம் இடம், ஓவியப் போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நிதிஷ் முதலிடம், வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் அபிஷேக் 2 ஆம் இடம், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மதன் 3 ஆம் இடம் பெற்றனர்.
 9 - 10 ஆம் வகுப்பு பிரிவு பேச்சுப் போட்டியில் அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவி வினிஷா முதலிடம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரித்திகா 2 ஆம் இடம், நூத்தப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெயபாரதி 3 ஆம் இடம், கட்டுரைப் போட்டியில் குன்னம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மகாதேவி முதலிடம், கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யா 2 ஆம் இடம், அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா 3 ஆம் இடம், ஓவியப் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமார் முதலிடம், லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் இளவரசன் 2 ஆம் இடம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தனுசு 3 ஆம் இடம் பெற்றனர்.
 11- 12 ஆம் வகுப்பு பிரிவு பேச்சுப் போட்டியில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மதியழகன் முதலிடம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சூர்யதர்ஷினி 2 ஆம் இடம், கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ச்சனா 3 ஆம் இடம், கட்டுரைப் போட்டியில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் காமராஜ் முதலிடம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வனிதா 2 ஆம் இடம், லப்பைக்குடிகாடு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சஸீமாபானு 3 ஆம் இடம், ஓவியப் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழரசன்
முதலிடம், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விஷ்வா 2 ஆம் இடம், நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன்குமார் 3 ஆம் இடம் பெற்றனர்.   
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 13) நடைபெறும் உலக பேரிடர் குறைப்பு தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com