நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்: சி.ஐ.டி.யு.வினர் ஆலோசனை

நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக, பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக, பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட வேண்டும். அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். பொதுத் துறையை தனியாருக்கு விற்கும் செயலைக் கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  நவ. 9. 10. 11-களில் சி.ஐ.டி.யு. உள்பட தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி நடைபெற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. மாநில துணைச் செயலர் எம். சந்திரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் வி. குமார், பி. கருப்பையன், மகாலட்சுமி கோபிகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலர் ஜி. சுகுமார் கோரிக்கைகளை விளக்கினார். கூட்டத்தில், முற்றுகைப் போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.
சி.ஐ.டி.யு. பெரம்பலூர் மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி, நிர்வாகிகள் எ. கணேசன், ஆர். ராஜகுமாரன், பி. கிருஷ்ணசாமி, எஸ். அகஸ்டின், சி. சண்முகம், மகேந்திரன், எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com