"5,692 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி'

நிகழாண்டில் 5,692 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

நிகழாண்டில் 5,692 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:
சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு எந்த வகையிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்தவர்கள் அல்லர் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையிலும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2017 ஆம் கல்வி ஆண்டுக்கு 5,692 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 7,05,20,800 மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 43 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 பேர் வீதம் 86 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 12,400 வீதம் ரூ. 10,66,400 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
தொடர்ந்து, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பொதுமக்கள் பங்களிப்பு தொகையான ரூ. 1 லட்சம் ரொக்கத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தா, முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி ஆகியோரிடம் மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. தமிழ்ச்செல்வன், ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட கல்வி அலுவலர் பிருதிவிராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர் ரெ. சுந்தர்ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com