ஷேரிங் பார்முலா திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

கரும்பு விவசாயிகளை பாதிக்கும் ஷேரிங் பார்முலா திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் மனு அளித்தனர்.

கரும்பு விவசாயிகளை பாதிக்கும் ஷேரிங் பார்முலா திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு:
ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையின் பேரில், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தவுள்ள ஷேரிங் பார்முலா திட்டத்தின் கீழ், வருவாய் பங்கீட்டு தொகையில் தனியார் கரும்பு ஆலைகள் பயன்பெறும் வகையில் உள்ளது. இதனால், லாபத்தில் உள்ள பங்கீட்டின் அடிப்படையில் எப்.ஆர்.பி விலை நிர்ணயம் செய்யப்படுவதால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
நஷ்டம் ஏற்பட்டால் விலை குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, அரசு எப்போதும் உள்ளது போல, மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க, ஷேரிங் பார்முலா திட்டத்தை அமல்படுத்தக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com