அண்ணா பிறந்தநாள்: பெரம்பலூர், அரியலூரில் சிலைக்கு மாலை

அதிமுக மற்றும் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 109- வது பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் குரும்பலூரில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து

அதிமுக மற்றும் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 109- வது பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் குரும்பலூரில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, பேரூர் செயலர் வி. செல்வராஜ், மாவட்ட இணைச் செயலர் ராணி, மாவட்ட அணி செயலர்கள் ராஜேஸ்வரி, சாகுல் அமீது, வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக சார்பில்: பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில், குரும்பலூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகரச் செயலர் எம். பிரபாகரன், ஒன்றியச் செயலர் அண்ணாதுரை, பேரூர் செயலர் வெங்கடேசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் எம். ராஜ்குமார், எம். தேவராஜன், பா. துரைசாமி, வழக்குரைஞர் என். ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் திமுக மாவட்ட இலக்கிய அணி சார்பில், அண்ணா உருவப் படத்துக்கு, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் கி. முகுந்தன் தலைமையிலான கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மகேந்திரன், யுவராஜா, பாலாஜி, ஜெய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரியலூர்...: அண்ணாவின் 109 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுகவினர் அரியலூர் ஒற்றுமைத் திடலில் இருந்து ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம், மாவட்ட மாணவரணிச் செயலர் சங்கர், அரசு வழக்குரைஞர் சாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
டி.டி.வி. தினகரன் அணியின் சார்பில், மாவட்டச் செயலர் முத்தையன், துணைச் செயலாளர்கள் மருதை, சுதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில், நகரச் செயலாளர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருமழபாடி கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக மாவட்டச் செயலர் ராம. ஜெயவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல, ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகளுக்கும், உருவப் படத்திற்கும் அதிமுக, திமுக, தேமுதிக கட்சி பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com