அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: 3,164 பேர் பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் 3,164 பேர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் 3,164 பேர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,793 பேர் தேர்வு எழுத அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்வில் 3,164 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், மையத்துக்கு ஒருவர் வீதம் 11 முதன்மை கண்காணிப்பாளர்கள், 11 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 11 துறை அலுவலர்கள், 11 கூடுதல் துறை அலுவலர்கள், 39 சோதனை அலுவலர்கள், 193 அறை கண்காணிப்பாளர்கள், இதர பணிகளை மேற்கொள்ள 77 நபர்கள் மற்றும் காவல் பணிகளில் 22 பேர் என மொத்தம் 375 நபர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, கோட்டாட்சியர் கதிரேசன், குன்னம் வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com