பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பார்வையற்ற ஆசிரியையிடம் ரூ. 52 ஆயிரம் திருடியவர் கைது

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் மகள் பாப்பாத்தி (29). பார்வையற்றவரான இவர், பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் மகள் பாப்பாத்தி (29). பார்வையற்றவரான இவர், பெரம்பலூர் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க ஆசிரியர் பாப்பாத்தி சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த நபர் ஆசிரியைக்கு உதவி செய்வதாகக்கூறி,  பாப்பாத்தியின் கணக்கிலிருந்து ரூ. 40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, அவரிடம் அந்த தொகையை வழங்காமல் வேறொரு ஏ.டி.எம் அட்டையை கொடுத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். பின்னர், பாப்பாத்தியின் ஏடிஎம்அட்டையின் மூலம் ஆத்தூரில் உள்ள வணிக நிறுவனத்தில் ரூ. 12 ஆயிரத்துக்கு வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கியுள்ளார். 
இதைத்தொடர்ந்து, வங்கிக்கு சென்ற பாப்பாத்தி வங்கி அலுவலர்களிடம் விசாரித்தபோது, அவரிடம் உள்ள அட்டை போலி என்பதும், ரூ. 52 ஆயிரம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.  பாப்பாத்தி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பழனியாபுரியை சேர்ந்த மாணிக்கம் மகன் கருப்பையா என்பது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை திங்கள்கிழமை கைது செய்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com