ரூ. 3.16 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாமில், ரூ. 3.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாமில், ரூ. 3.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
அரசின் திட்டங்கள் குறித்து விளக்கவும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையிலும், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 2 மாதத்துக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஓய்வூதியம், உபகரணங்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் 17 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்டு, அவற்றை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் வே. சாந்தா.  
தொடர்ந்து, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட தலா ரூ. 58,840 மதிப்பில் ஸ்கூட்டர் 3 நபர்களுக்கும், தலா ரூ. 6,940 மதிப்பில் மூன்று சக்கர வண்டி 6 நபர்களுக்கும், பராமரிப்பு உதவித்தொகையாக ரூ. 3 ஆயிரம் மதிப்பில் காசோலை ஒருவருக்கும், சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் மானிய உதவித்தொகையாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கு காசோலைகளும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத பங்குத்தொகைகள் 6 நபர்களுக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்பில் காசோலைகளும் என மொத்தம் 30 நபர்களுக்கு ரூ. 3.16 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டைகளும் வழங்கினார் ஆட்சியர் சாந்தா. 
முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, எலும்பு முறிவு மருத்துவர் ஜெகதீசன் பரிசோதனை மேற்கொண்டார். 
இதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் த. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com