மானியத்துடன் கூடிய மதிப்புக் கூட்டும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ், கல்பாடி, பேரளி கிராமங்களில் மானியத்துடன் கூடிய மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ், கல்பாடி, பேரளி கிராமங்களில் மானியத்துடன் கூடிய மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த மையங்களை வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கூறியது:
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டில் கல்பாடி, கொளக்காநத்தம், மருவத்தூர், வேப்பூர், பசும்பலூர், வெண்பாவூர் ஆகிய இடங்களில் தடுப்பணையுடன் வரப்புகள், பண்ணைக் குட்டைகள் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இடங்களில் தலா ரூ.8 லட்சம் மானியத்துடன் கூடிய தலா ரூ.11.75 லட்சம் மதிப்பில் கிராம அளவிலான வாடிக்கையாளர் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. பேரளி, மருவத்தூர், கல்பாடி ஆகிய மையங்களில் ரூ.10 லட்சம் அரசு நிதியுடன் மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நபார்டு வங்கி மூலம் அமைக்கப்பட்ட பேரளி சிறுதானிய விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் பேரளி கிராமத்தில் பழைய அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் மையம் செயல்பட உள்ளது. இந்த மையத்தில் கல் நீக்கும் இயந்திரம், பருப்பு தோல் நீக்கும் இயந்திரம், கடலை உடைக்கும் இயந்திரம், நெல் உமி நீக்கும் இயந்திரம் ஆகிய இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், வேளாண்துறை இணை இயக்குநர் கனகசபை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com