பெரம்பலூர் மாவட்ட கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில், அக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், அணி வகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
 விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், செயலர் பி. நீல்ராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜபூபதி, மணி, ராஜசேகர், கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
தொடர்ந்து, இந்தியத் திருநாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 72 மரக்கன்றுகள் நட்டு வைத்தார் தாளாளர் அ. சீனிவாசன்.  
ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், 
பெரம்பலூர் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராமகிருஷ்ணா மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியன், தேசியக் கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர், பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழாவில், கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர்கள் எம். சுபலட்சுமி, ஏ. ராஜசேகர், பி.எல். சுப்ரமணியன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதேபோல, குரும்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com