செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் அளிக்கப்படும் செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 

பெரம்பலூர் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் அளிக்கப்படும் செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
கிராம பகுதி இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சியானது தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இருசக்கர வாகனம் ஓட்டும் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 3 மாத பயிற்சியும், பயிற்சி முடித்த பின் கருவூட்டல் உபகரணங்களும் அரசு மூலம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த நபர்கள் கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களிலிருந்து 3 முதல் 5 கி.மீ தொலைவுக்கு மேல் உள்ள கிராமங்கள் மற்றும் அரசு கருவூட்டல் நிலையங்கள் இல்லாத இடங்களில் செயற்கைமுறை கருவூட்டல் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த கருவூட்டல் பணிக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். எனவே, விருப்பமுள்ளோர் பெரம்பலூர் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநர் அலுவலகத்தை (பெரம்பலூர் கால்நடை மருந்தக வளாகம்), அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு 04328- 225799.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com