எளம்பலூர் ஊராட்சியில் விலையில்லா வேட்டி, சேலைகள்

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வேட்டி, சேலைகள் வழங்கிய பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் வட்டத்தில் 36,620 வேட்டி, 36,932 சேலை, வேப்பந்தட்டை வட்டத்தில் 38,292 வேட்டி, 40,141 சேலை, குன்னம் வட்டத்தில் 39,213 வேட்டி, 38,232 சேலை, ஆலத்தூர் வட்டத்தில் 28,866 வேட்டி, 28,964 சேலை என மொத்தம் 2,87,260 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்படுகின்றன.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களும், நெசவாளர்களும் பெரிதும் பயனடைகிறார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு, தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com