வருவாய்த் துறை சான்றிதழ் பெற வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் வருவாய்த் துறை சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் வருவாய்த் துறை சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ், 191 இ- சேவை மையங்கள் செயல்படுகின்றன.
இவற்றின் மூலமாக வருவாய்த் துறையால் வழங்கப்படும் 20 வகையான சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் சமூக நலத் துறையால் வழங்கப்படும் திருமண உதவித்தொகை, பெண் குழந்தைப் பாதுகாப்பு நிதியுதவி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும், மின் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
தற்போது, இ-சேவை மையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களை இணையதளம் மூலம், பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் விண்ணப்பித்து, எளிதில் பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற விரும்புவோர்  இணையதள முகவரியில் பதிவு செய்வதற்கான யூசர் ஐடி பெற்ற பிறகு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com