"சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்'

தனியார் பள்ளி வாகனங்கள் தவறாமல் சாலை விதிகளைப் பின்பற்றுங்கள் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.

தனியார் பள்ளி வாகனங்கள் தவறாமல் சாலை விதிகளைப் பின்பற்றுங்கள் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி  பேருந்துகளின் வருடாந்திர ஆய்வு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவசர வழி உள்ள வாகனங்களில், அவை முறையாக பராமரிப்பில் உள்ளதா என்று அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஓட்டுநர்களையே  பள்ளி நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும். முறையான வாகன பதிவேடு பராமரிக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் முதலுதவி பெட்டி,  தீயணைப்பு கருவிகள் பொருத்த வேண்டும். மோட்டார் வாகனச்சட்டப்படி வாகனங்களை முறையாகப் பராமரிக்காத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு, பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் சாந்தா.
தொடர்ந்து, விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.  ஆய்வில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 195 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 
மேலும், இந்த ஆய்வில் கலந்து கொள்ள இயலாத வாகனங்கள் மே இறுதிக்குள் தங்கள் பதிவை புதிப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரெங்கராஜ், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேதுராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) ஜெய்தேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com