பெரம்பலூர் மாவட்டத்தில்  எந்தப் பாதிப்பும் இல்லை

திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால், பெரம்பலூர்  மாவட்டத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை

திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால், பெரம்பலூர்  மாவட்டத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை, வாகனங்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கின.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து, திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பெரம்பலூர் மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 25 சதவீத கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. அந்தக் கடைகளும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மூடப்பட்டிருந்தன.  இதைத் தவிர, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கின. இதேபோல, டீக்கடைகள், உணவங்கள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. சுப்முகூர்த்த நாள் என்பதால், பெரம்பலூர் நகரை பொறுத்தவரை வழக்கத்தை விட அதிகளவிலான மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com