பெரம்பலூர் அற்புதா மருத்துவமனையில் நவ. 18 ஆம் தேதி குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அற்புதா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் சாமுவேல் தேவக்குமார் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் அற்புதா மெடிக்கல் கேர் மருத்துவமனை மற்றும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை இணைந்து நவ. 18 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 16 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மூச்சிரைப்பு, சருமம் நீலமாதல், குறைவாக உணவு உண்ணுதல், எடை அதிகரிக்க இயலாமை, அதிகமாக வியர்வை, நினைவு தப்புதல் உள்ளிட்ட குறைபாடுகளுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறலாம்.