தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் 

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டத் தலைவர் வீ. ஞானசேகரன், சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி, தொமுச மாவட்டச் செயலர் ஆர். ரெங்கசாமி, எச்எம்எஸ் மாவட்ட செயலர் ஏ. சின்னசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், வேலைவாய்ப்பில் ஒப்பந்த முறையையும், அவுட்சோர்சிங் முறையையும் கைவிட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை மாநில அரசு வலுப்படுத்த வேண்டும். 
நெல் உற்பத்திக்கான ஆதரவு விலையை வழங்கிட வேண்டும். கரும்புக்கு கட்டுப்படியாகும் விலையை வழங்க வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தைக் கைவிட வேண்டும். 
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி விகிதத்துக்குள் கொண்டு வந்து அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 
தொழிற்சாலை ஆய்வுத் துறையை செயல்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழஇலாளர் நல வாரியங்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ். அகஸ்டின், கே.கே. குமார், என். தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
அரியலூரில்.. அரியலூர் அண்ணாசிலை அருகே மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் டி. தண்டபாணி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் இரா. தமிழ்மணி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். சிற்றம்பலம்,தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் பி.ஆர்.சட்டநாதன், எச்எம்எஸ் சங்க நிர்வாகி எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com